Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

July 15, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வியாழக்கிழமை (13-07-2023) மாலை கொண்டு செல்லப்பட்ட போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, சீனங்குடா, சின்னப்பிள்ளை சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 44 வயது தௌப்பிக் முகமட் தாரிஸ் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் அட்டை தொழிலை மேற்கொண்டு வரும் அவர் நேற்றைய தினம்
தெல்லிப்பழை நோக்கி மோட்டார் சைக்கிள் சைக்கிளில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சடலம் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (14-07-2023) எடுத்து வரப்பட்டது.

இந்த நிலையில் அங்கு பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

Tags: #ChestPain#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsdeathjaffnasrilanka
Previous Post

இலங்கை மண்ணில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; வைரலாகும் புகைப்படங்கள்!

Next Post

இன்று முதல் 1000 ரூபா விலை குறையும்!

Next Post
இன்று முதல் 1000 ரூபா விலை குறையும்!

இன்று முதல் 1000 ரூபா விலை குறையும்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.