கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 912 ஆக இருந்தது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 59 ஆயிரத்து 317 டெங்குத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
பொதுமக்கள் டெங்குத் தொற்றுத் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post