லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தெஸார ஜெயசிங்க பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார்.
தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி உரிய ஆதரவை வழங்கியபோதும், உரிய அமைச்சரோ, நிதித்துறை அதிகாரிகளோ உரிய ஆதரவை வழங்கவில்லை என்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு உதவாமல், மாறாகப் பிழையான அறிக்கைகளை வெளியிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குறுகிய இலாபமீட்டும் அரசியல் கலாசாரம் லிட்ரோ நிறுவனத்தில் மட்டுமல்ல, அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள அவர், இந்தச் சூழலில் தன்னால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post