எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டத்தில்
மாவட்டத்தைச்சேர்ந்த 20வயது தொடக்கம் 30வயதுப்பிரிவினருக்கு தடுப்பூசி
ஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல்
வைத்தியர்.நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பாக
தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிராந்திய சுகாதார சேவைகள்
பணிமனையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட
20-30வயதுப்பிரிவினர் 28482 பேர் உள்ளனர் அவர்களுக்கான முதற்கட்ட
தடுப்பூசி ஏற்றும் பணிகள் திங்கட்கிழமை 20ம் திகதி கிளிநொச்சி மத்திய மகா
வித்தியாலயம் ,தர்மபுரம் மத்திய கல்லூரி , முழங்காவில் ஆதார
வைத்தியசாலை ,பூநககரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும்
தடுப்பூசி ஏற்றும் நடவவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 21ம் திகதி
செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் உருத்திரபுரம்
பிரதேச வைத்தியசாலை, அக்கராஜன் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா
வித்தியாலயம் ,முழங்காவில் ஆதார வைத்தியசாலை ,தர்மபுரம் மத்தியகல்லூரி
,பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றிலும் தடுப்பூசி ஏற்றும்
பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post