தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக, தம்மிக்க பெரேரா நாளைமறுதினம் பதவியேற்கவுள்ளார்.
சர்வக்கட்சி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நாளைமறுதினம் மாலை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு முன்னர் தம்மிக்க பெரேரா, ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்வாரென அறியமுடிகின்றது. தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின்கீழ் வரும் திணைக்களங்கள் உள்ளிட்ட விவரங்கள் முன்கூட்டியே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அந்த இடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். அதைத் தேர்தல் ஆணைக்குழுவும் ஏற்று அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதியே, சபாநாயகர் முன்னிலையில் தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினரான உறுதியேற்பார். எனினும், அதற்கு முன்னராகவே அவர் அமைச்சராகிறார்.
Discussion about this post