சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அங்கிருந்து தாய்லாந்துக்குச் செல்லவுள்ளார்.
சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் நிலையில், அவர் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விசாரணை வழங்க சிங்கப்பூர் இணங்காத நிலையில், கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து செல்லவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தாய்லாந்து அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரியவருகின்றது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்தில் தங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது என்றும் இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Discussion about this post