தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் மக்களை லாவோஸுக்கு அழைத்துச் சென்று, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்றத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளை தவிர்த்து வந்த அவர், சட்டத்தரணி ஊடாக பணியகத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தில் உள்ள நிறுவனமொன்றில் வேலை வழங்குவதாகக் கூறி சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிக்கித் தவிக்கும் நபர்களைப் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சந்தேக நபரிடம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து வந்த சந்தேக நபர் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்ட நிலையில், சட்டத்தரணி ஊடாக விசாரணை பிரிவில் சரணடைந்துள்ளதுடன், இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Discussion about this post