தாய்ப்பால் புரைக்கேறி 15 நாள்களேயான சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளிப்பன் பகுதியில் நடந்துள்ளது.
தாய் பால் கொடுத்த பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமடைந்துள்ளது. அதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது.
தாய்ப்பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்குக் காரணம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டன.
Discussion about this post