வவுனியா, தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதுண்டு, உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த மைக்கல் தினகரன் (வயது-44) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடனேயே இவர் மோதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post