மக்களின் கடும் எதிர்ப்பால் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமுக்குள் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்னமும் தலைமறைவாகவே உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நடைபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை.
கடந்த 10ஆம் திகதி பதவியில் இருந்து விலகிய மஹிந் ராஜபக்ச, தற்போதுவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைமறைவு வாழ்க்கையையே முன்னெடுத்து வருகின்றார்.
Discussion about this post