தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோயால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக வெப்பமண்டல நோய்களுக்கான வைத்தியசாலையின் வைத்தியர் ஹுய்ன் தி துய் ஹோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நிலையில் நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளதோடு 40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
Discussion about this post