2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும் என்று அறிய முடிகின்றது.
பரீட்சைப் பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பரீட்சைகள் ஆணையாளருக்குப் பணித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள் வெளியானால், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பரீட்சைகள் திணைக்களமோ, பரீட்சைகள் ஆணையாளரோ தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
Discussion about this post