பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக தரம் குறைந்த இரசாயன உரங்களை விநியோகிக்கும் உர நிறுவனங்களுக்குத் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இரசாயன உரங்களை தயாரிக்கும் அனைத்து உர நிறுவனங்களையும் விவசாய அமைச்சுக்கு அழைத்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது விவசாயிகளுக்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக்கடன் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் தொன் யூரியாவின் ஒரு பகுதி கடந்த 28 ஆம் திகதி விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் நிறையுடைய யூரியா மூட்டையை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் தரம் குறைந்த இரசாயன உரங்களை விநியோகிக்கும் உர நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
Discussion about this post