தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஜெ. சற்குணதேவி மருதங்கேணி காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்ணி கூறியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக திட்டமிட்டு அராஜகம் அரங்கேற்றப்படுவதாகவும் மூன்று மாதங்களில்
முப்பதாவது கைது அரங்கேறியுள்ளதாகவும் கட்சியின் பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
கைதுகளுக்கு அஞ்சிக் கொள்கையை கைவிட தமது கட்சியுடன் நிற்பவர்கள் சோற்றுக்காகவோ அல்லது
மதுபானத்திற்காகவோ வந்தவர்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் உந்துருளியில் வந்த இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணிக்கு கூட்டத்திற்கு அழைத்தமை தொடர்பில் விரைவில் கைது செய்யப்படுவீர் என ஜெ. சற்குணதேவி எச்சரித்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post