தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணம் இதுவரை முடிவுனிலையை எட்டவில்லை என தமிழ்
முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இவ் ஆவணத்தில் கைச்சாத்திடுவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின்
அரசியல் குழு நேற்று முந்தினம் (02) முடிவு செய்து இருந்தது .13 ம் திருத்தச் சட்டத்தை மூலத்தை
முழுமையாக நடைமுறபடுத்துவதை முன்னிலைப்படுத்தி, இந்திய மத்திய
அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும் ஆவணம் ஒன்றை உருவாக்கும் நோக்கில்,
பல்வேறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன.
இதில் இறுதியாக சேர்ந்து கொண்ட இலங்கைத் தமிழரசு கட்சி, 7 பக்க ஆவணம்
ஒன்றை உருவாகி வழங்கி, அதில் சில திருத்தங்களையும் மேற்கொண்டு அதற்கு
இணக்கப்படுவதாக தெரிவித்திருந்தது
சென்ற மாதம் 22 ஆம் திகதி இவ் இணக்கப்பாடு மேர்கொள்ளப்பட்டது.இருப்பினும் இவ்
ஆவணம் மலையக மற்றும் முஸ்லிம்கள் கட்சிகள் முன்வைத்த சில திருத்தங்கள்
உள்ளடக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனோடு இணங்க முடியாது
என்று இலங்கைத் தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளது.
Discussion about this post