இருளும் சோகங்களும் வாழ்க்கையில் இருந்து அகன்று பிறந்திருக்கும் இந்த புதிய புத்தாண்டு அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை மட்டும் மலரவைக்கட்டும்.
கடந்த ஆண்டின் கசப்பான நினைவலைகளைக் கடந்து, புதிய 2024 ஆம் ஆண்டை கனவுகள், இலட்சியங்களோடு, வரவேற்போம்.
மலர்ந்துள்ள புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளோடு, புதிதாகத் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புகழையும் மன மகிழ்ச்சியையும் வாரி வழங்க வேண்டும் என்ற நல்வாழ்த்துக்களை தமிழ் ஆரம் ஊடகம் தெரிவித்துக்கொள்கிறது.
இதுவரை தமிழ் ஆரம் ஊடகத்திற்கு ஆதரவு வழங்கிய உறவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்தும் இந்த புதிய ஆண்டிலும் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம்.
தமிழ் ஆரம் உறவுகளுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Discussion about this post