தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற மாணவனை அதிபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மன்னாரில் உள்ள பாடசாலையொன்றில் 10 வயதான மாணவனொருவன் அதிபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி ”அதிபர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அதிபரிக்கு 25,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளதோடு, குறித்த தண்டனையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்பளித்துள்ளார்.
Discussion about this post