தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றத் தயார் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோ இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது. அதன்போதே ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
6 தமிழ்க் கட்சிகள் கூட்டாகத் தயாரித்த ஆவணத்தை ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர்.
அந்த ஆவணத்தை ஆராய்ந்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தொலைபேசியில் அது தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
வடக்கு, கிழக்குக்கான நிதியம் அமைப்பதில் நீதுிமன்றத் தடைகள் ஏற்படலாம் என்பதால், மாகாண சபைகளின் ஊடாகச் செயற்படும் நிதியம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவ்வாறு நிதியம் ஆரம்பிக்கப்பட்டால் அது எந்தச் சந்தர்ப்பத்திலும் நீக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டிய சி.வி.விக்னேஸ்வரன் ரணிலின் யோசனையை நிராகரித்தார் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post