இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு –
கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும்
மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு
அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்
பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும்
சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை
இருக்கின்றது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
Discussion about this post