நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் பெரும் குழப்பத்தில் நடைபெற்று வருகின்றன.தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தவர்களிற்கு எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு ஏற்பாடுகளை கட்சியின் குழப்பங்களுக்கு காரணமான சட்டத்தரணி மற்றும் வைத்தியர் தயாரித்துள்ள நிலையில் அவர்களை பட்டியலில் இருந்து நீக்கி குழப்பவாதி சட்டத்தரணிகளின் ஆதரவாளர்களை உள்ளடக்கிய 3 மாவட்டங்களுக்கு உரிய வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவைத்தலைவர் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதுடன், குறித்த சட்டத்தரணியை எதிர்த்து யாரும் இன்று தமிழரசில் அரசியல் செய்ய முடியாது அவன் தான் சிங்கம், அவன் இன்றி எதுவும் அசையாது, மாவை எல்லாம் சும்மா ஓம் தம்பி பாப்பம் தம்பி எனும் அறுவான் மாவை உள்ள வரை இந்த கட்சி உருப்படாது.
கட்சியின் முக்கிய பதவியில் உள்ள வைத்தியர் சற்று உடல் நலக்குறைவாக இருப்பதனால் வேட்பாளர்களை இறுதியிடும் பணியை தானே செய்வதுவதாக குறிப்பிட்ட அவைத்தலைவர், ஒப்பமிடும் போது சுகயீனம் காரணமாக வைத்தியர் செயற்பட முடியாத சந்தர்ப்பத்தில் அடுத்த நிலையில் உள்ள சட்டத்தரணி ஒப்பமிட்டு வேட்புமனு தாக்குதல் செய்வார், ஒரு கவலை தலைவர் என கூறப்பட்ட ஒருவரும் அரசியலில் பெரும் பின்னடைவை சந்திக்கவுள்ளார் எனவே கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு முழுமையான தகுதி சட்டத்தரணிக்கே உண்டு என அவைத்தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post