இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காணப்படவில்லை. இதனை உணர்ந்து, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துரைகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு அவர், நன்றிகளையும் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையை இதுவரை ஆண்ட எந்தவொரு அரசும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும், இந்த அரசு நாட்டை வங்குரோத்து அடைய வைத்துள்ளது. எனவே, பதவி விலகுவதைதவிர வேறு வழியில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post