இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மாதம் 8 ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டன. மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 11 பேருக்கும் எதிரான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான் ஜெ.கஜநிதிபாலன், மீனவர்களுக்கு 18 மாத காலச் சிறைத்தண்டனை விதித்து 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை, தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.
Discussion about this post