Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள் – தப்பித்துக் கொண்ட திருச்சிற்றம்பலம்!

August 23, 2022
in சினிமா
தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள் – தப்பித்துக் கொண்ட திருச்சிற்றம்பலம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு அனிருத் இசை பக்கபலமாக இருந்தது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் நடிகை நித்யாமேனனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அவரது நடிப்பு இருந்தது. ஒரு படி மேலாக சொல்ல வேண்டும் என்றால் நடித்த ராட்சசி என்று நித்யா மேனனை சொன்னால் மிகையாகாது.

படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது சிரிப்பு, நடிப்பு என அனைத்தும் வேற லெவல் இருந்தது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நித்யா மேனனுக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது. அவ்வாறு கனகச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

ஆனால் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷ் வேறு மூன்று நடிகைகளை முதலில் தேர்வு செய்துள்ளார். அதாவது முதலில் Wunderbar Films இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. அந்தச் சமயத்தில் நித்யாமேனன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது.

பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராசி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிப்பதாக தேர்வாகியுள்ளனர். ஆனால் திருச்சிற்றம்பலம் படம் சன் பிக்சர்ஸ் கைவசம் வந்த பிறகு ஹீரோயின்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒருவேளை முதலில் தேர்வு செய்யப்பட்ட ஹீரோயின்கள் இப்படத்தில் நடித்திருந்தால் படம் இந்த அளவுக்கு வரவேற்பு பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இதை அறிந்த ரசிகர்கள் கடைசி நேரத்தில் நடிகைகளை மாற்றியதால் திருச்சிற்றம்பலம் படம் தப்பித்து விட்டதாக கூறி வருகின்றனர்.

Tags: தனுஷ்திருச்சிற்றம்பலம்நடிகர் தனுஷ்நித்யா மேனன்பிரியா பவானி சங்கர்
Previous Post

உணவுப் பணவீக்கத்தில் 5 ஆவது இடத்தில் உள்ள சிறிலங்கா

Next Post

இன்றைய ராசி பலன் – 24.08.2022

Next Post
இன்றைய ராசி பலன் –  24.08.2022

இன்றைய ராசி பலன் - 24.08.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.