ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது சுமத்த முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றாலும், வீரர்களின் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், அவுஸ்திரேலியாவில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவது ஒரு தொழிலாக இருப்பதையும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post