’கேப்டன் மில்லர்’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ், தனது இயக்கத்தில் உருவாக உள்ள D50-யில் கவனம் செலுத்தி வருகிறார்.
வட சென்னை களத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தில் அனிகா சுரேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் அஜித்குமாரின் மகளாக நடித்து அனிகா பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion about this post