தமிழரசு கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு ஒரு தனிப்பட்ட நபரே காரணமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் (C.V Wigneswaran) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றாகவே பயணித்து வருகின்றன.
தமிழ் மக்களின் அரசியல்
சில வேளைகளில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் அனைவரும் ஒரு அணியாக செயற்பட்டு வருகிறோம்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழரசு கட்சியை சேர்ந்த சுமந்திரன் (Sumandran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan) தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவை இதுவரையும் வழங்கவில்லை.
அவர்கள் முதலில் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரவு வழங்குவார்கள் என பேசப்பட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரிப்பவர்கள் போல் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
Discussion about this post