புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 134 வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் 87 வாக்குகள் டலஸ் அழகப்பெருமவுக்கும் கிடைத்துள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெருமவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக் கட்சிகளும், தெற்கின் பல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆயினும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டியுள்ளார்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post