Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

September 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) நேற்றையதினம் (11) கையொப்பமிட்டுள்ளார்.இதன் படி, தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம்அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல், தனியார் துறை முதலாளிகள் தங்கள் தொழிலாளர்ளுக்கு தேசிய குறைந்தபட்ச சம்பளமாக 17,500 ரூபாயையும், 2005 ஆம் ஆண்டின் 36 மற்றும் 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வரவு செலவுத் திட்ட நிவாரணச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட 3,500 ரூபாய்வுக்கு மேலதிகமாக 21,000 ரூபாய் குறைந்தபட்ச சம்பளத்தையும் வழங்குவார்கள்.

புதிய குறைந்தபட்ச சம்பளமானது தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் அறக்கட்டளை மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அனைத்து தனியார் துறை தொழிலாளர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைப்படுத்தியது.இச் சட்டம் ஆரம்பத்தில் மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 10,000 ரூபாயாகவும், நாளாந்த தொழிலாளர்களுக்கு 400 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.சம்பள அதிகரிப்பு2021 ஆம் ஆண்டின் திருத்த சட்டத்தின் மூலம், குறைந்தபட்ச மாத சம்பளம் 12,500 ரூபாயாகவும், நாளாந்த சம்பளம் 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது, இது அதே ஆண்டு ஓகஸ்ட் முதல் நடைமுறைக்கு வந்தது

நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் தனியார் துறையின் சம்பளம் 2021ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்கப்படவில்லை.எனவே தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாயில் இருந்து 17,500 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.மற்றும் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக உயர்த்தப்பட்டது.உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றிய பின்னர், இத் திருத்தம் செப்டம்பர் 3, 2024 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிலையிMahinda Yapa Abeywardenaடர்ந்து இம்மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.”

Previous Post

நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Next Post

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: வெளியாகியுள்ள எச்சரிக்கை

Next Post
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: வெளியாகியுள்ள எச்சரிக்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: வெளியாகியுள்ள எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.