யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் இன்று அதிகாலையில் நடந்திருக்கலாம் என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சாணை தவமணி என்ற 78 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் வாழ்ந்து வந்த இந்தப் பெண்ணின் வீட்டுக்கு இன்று காலையில் உறவினர் சென்றபோது இரத்த வெள்ளத்தில் பெண் வீழ்ந்து கிடந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பெண்ணின் கழுத்தில் இரு இடங்களில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட அடையாளம் காணப்படுகின்றது. பெண் அணிந்திருந்த நகைகளோ, வீட்டிலிருந்த பொருள்களோ கொள்ளையிடப்படாத நிலையில், கொலைக்கான காரணம் மர்மமாகவே இருக்கின்றது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண்ணின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post