தனிப்பட்ட நாடுகள் மீது வெளிநாட்டுத் தீர்வுகளை திணிப்பது ஐ.நா. வின்
கொள்கைகளுக்கு முரணானது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டொன் பிரமுத்வினாயுடனான மற்றும்
இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் தேரவாத பௌத்த மதத்தைப்
பின்பற்றுவதால் வலுவான மற்றும் வரலாற்று இருதரப்பு உறவுகளைக்
கொண்டுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட நாடுகளின் மீது வெளிநாட்டுத் தீர்வுகளைத் திணிப்பது ஐ.நா. வின்
கொள்கைகளுக்கு முரணானது என்ற கொள்கை நிலைப்பாட்டில், ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவையில் ஆதரவளித்தமைக்காக தாய்லாந்து அரசாங்கத்திற்கு
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.
Discussion about this post