தனித்து விடப்பட்ட வனிதாவிடம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது தெரியுமா? மொத்த குடும்பத்தாலும் வெறுக்கப்பட்டு தனிமையில் வாழும் வனிதாவிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார். ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.
என்னதான் தன் குடும்பம் வெறுத்து ஒதுக்கினாலும் தன் பிள்ளைகளுக்காக தனியாக உழைத்து வாழ்ந்து வருகிறார். இவர் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி உழைத்து மொத்தமாக 7.63 கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் வனிதா.
Discussion about this post