உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள வற் வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸேவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுரகுமார , “உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வற் வரி முற்றிலும் நீக்கப்படும்.மின் கட்டணத்தை குறைக்கும் திட்டம் மிகக்குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தப்படும்
உத்தரவாதம்
வாழ முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும், மிகவும் கஷ்டப்படும் நபருக்கு 17,500 ரூபாயும் வழங்கப்படும்.உள்ளவற்றைக் கைவிட்டு அரசியலை பொதுச் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே நம்பிக்கை.
நாங்கள் வெற்றி பெற்றால் எரிபொருள் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள், ரணில் அரேபியாவின் சுல்தானா?ரணில் இல்லாவிட்டால் எரிவாயு இல்லாமல் போய்விடுமாம் அப்படியென்றால் ரணில் எங்காவது எரிவாயுக் கிணற்றைக் கண்டுபிடித்து விட்டாரா?
தேசிய மக்கள் சக்தி எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் தடையின்றி தொடர்ந்து வழங்கும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம்”.என்றார்.
Discussion about this post