அமெரிக்காவில் தந்தையின் வீடியோ கேம் அடிமைத்தனத்தால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது, காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.
வெப்பத்தால் உயிரிழந்த குழந்தை
குழந்தைக்கு சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயனில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையின்படி , குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பிலான விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் குழந்தை உயிரிழந்ததாக குறிபிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ், உயிர்ழந்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
Discussion about this post