சிறிலங்கா அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட ஜெனிவாவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும், பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குழுவின் 23ஆவது அமர்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வறுமை மற்றும் தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல், துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கிய சட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது . அவ்வாறான ஒரு நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் செய்யக்கூடிய விடயம் என்னவென்றால் அழுதுபுலம்புவது மட்டும்தான்.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நீதியை வழங்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறையை ஐ.நா. முன்வைக்கவேண்டும். தற்போதைய ஜனாதிபதி ரணில், 2017ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி வகித்தவேளை காணாமல்போன அனைவரும் உயிரிழந்துவிட்டனர் அல்லது வெளிநாட்டு சென்றுவிட்டனர் என தெரிவித்தார், அவர் நீதியை வழங்குவார் என எதிர்பார்க்க முடியாது .
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு விசாரணையாளர்களையும், சாட்சிகளையும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக மாற்றியது.
2010 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்டது முதல் அரசாங்கம் மற்றும் அதன் அமைப்புகளால் கடுமையான நெருக்கடிகளை எதிரொண்டேன். காணாமல் ஆக்கப்பட்ட எனது கணவர் தொடர்பான வழக்கில் நீதி வழங்கப்படுமா என்பதே பிரதான சவால் எனவும் சந்தியா எக்னலிகொடதெரிவித்துள்ளார்.
Discussion about this post