வவுனியா- ஈரட்டைப் பகுதியில் தடை செய்யப்பட்ட பொருள்களுடன் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார் என்று ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வத்தளைக்குப் பயணம் செய்த கன்ரர் ரக வாகனத்தை ஈரட்டைப் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
வாகனத்தில் 3 ஆயிரத்து 800 கிலோ மஞ்சள், 250 மில்லிலீற்றர் கிருமிநாசினி மருந்து போத்தல் 519 ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 43 வயது நபர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post