கொரோனா வைரஸ் தொற்றுபரவலுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதை சிலர்
தவிர்ப்பதினால் அத்தகைய நபர்களினால் மற்றவருக்கு தொற்று ஏற்படும் நிலை
ஏற்படுமாயின் தடுப்பூசி ஏற்றுவதைக் கட்டாயப்படுத்துவது தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதை சிலர் தவிர்த்துவருவதினால் தடுப்பூசியை
ஏற்றிக்கொள்வது கட்டாமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில்
அளிக்கையில், தடுப்பூசி ஏற்றுவதே மிகவும் சிறந்தது என மருத்துவ
நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு
அமைவாக அனைத்து மக்களும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் அவசியத்தை நாம்
அறிவுறுத்திவருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post