பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் செயற்பாடு பல தரப்பினரால் தாமதமானது.
இந்நிலையில், இவ் விடயத்தை செயற்படுத்துவது சம்மந்தமான அனைத்தையும்
இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரு வாரங்கள் எடுக்குமென சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்லகூறியுள்ளார்.
தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை
அறிமுகப்படுத்துவது போன்ற பிற காரணிகள் இன்னும் முடிவுசெய்யப்பட வேண்டும்
என்று கூறினார்.
தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதற்குப் பதிலாக QR குறியீட்டை
அறிமுகப்படுத்துவது மக்களுக்கு இலகுவாக இருக்கும் என்றுஎண்ணுவதாகவும் கூறினார்
எனவே, QR குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் சேர்ந்து
தேவையான ஏற்பாடுகள் செய்யபடு வருகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எனினும், இம் மாத இறுதிக்குள் தேவையான நடவடிக்கைகள் கட்டாயமாக
முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Discussion about this post