தடுப்பூசியின் மீது அதீத நம்பிக்கையுடன் அதிகாரிகள் எடுக்கும் சில தீர்மானங்களால் நாட்டில் கொரோனாத் தொற்றுத் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.
தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாத புதிய கொரோனாத் திரிபுகள் உருவாக்கும் அபாயம் இன்னமும் இருக்கின்றது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசியை முழுமையாக நம்பி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தளர்த்தியுள்ளதுமை துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளது அவர், இந்தத் தீர்மானங்களால் நாடு எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
Discussion about this post