தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசுலா நபரில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பொலிவார் மாநிலத்தில் உள்ள புல்லா லோகா சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததை அடுத்து இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்தின் அருகிலுள்ள நகரமான லாபராகுவாவிலிருந்து 7 மணிநேர படகுப் பயணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் தகவலுக்காக காத்திருக்கிறார்கள்.
இதன் போது, அப்பகுதியில் இருந்து வந்த படகில் இருந்து 15 சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் 23 சடலங்கள் மீட்கப்பட்டதாக அன்கோஸ்டுரா நகரசபையின் தலைவர் யோர்க்கி அர்சினிகா குறிப்பிட்டார்.
Discussion about this post