வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் என்பவற்றுக்கு அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் நண்பர்களை நியமிக்கும் வழக்கத்தை ஒழித்து, தகுதியானவர்களுக்கு மட்டும் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதான நாடொன்றில் கடமையாற்றி வரும் இரட்டைக்குடியுரிமை கொண்ட தூதுவர் ஒருவர் அடிக்கடி களியாட்டங்களை நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே இந்த முடிவை அரசாங்கம் கொள்கையளவில் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி இந்தியா, சீனா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புதிய தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Discussion about this post