கோவிட் 19 பெரும் பரவல் காரணமாக, இம்முறை வழகத்திற்கு மாறாக , அரைவாசிக்கும் குறைவான வாக்களிப்பு நிலையங்களையே அமைக்கபடவுள்ளன . குறிப்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு கனடிய பாராளுமன்ற தேர்தலின்போது, 102 வாக்குச்சாவடிகளை கொண்டிருந்த டொரோண்டோ மத்தி தொகுதி, இம்முறை 22 சாவடிகளை மாத்திரமே கொண்டிருக்கவுள்ளது. வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்காக, நாடளாவிய ரீதியில், 14,000க்கும் மேலான வாக்களிப்பு நிலையங்களை கனடிய தேர்தல் திணைக்களம் அமைக்கவுள்ளது. இது, 2019 தேர்தலை விட, 7 வீதம் குறைவானதாகும்.
Discussion about this post