தீயணைப்பு பிரிவினருக்கான, புதிய தீயணைப்பு வாகனம் ஒன்றை, டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரி, தீயணைப்பு துறை தலைமை அதிகாரி மத்தியூ பெக் ஆகியோர் இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த வாகனம், 70 மீற்றர் உயரத்துக்கு தீயணைப்பு வீரர்களை கொண்டுசெல்ல கூடிய தூக்கியை கொண்டுள்ளது.
இது கிட்டத்தட்ட 22 மாடி கட்டடம் ஒன்றின் உயரமாகும். அதனடிப்படையில், வட அமெரிக்காவிலேயே, இவ்வளவு உயரத்துக்கு வீரர்களை கொண்டு செல்லக்கூடிய தீயணைப்பு வாகனத்தை, டொரோண்டோ சொந்தமாக்கியுள்ளது.
Discussion about this post