கனடாவின் டொரன்டோவில் அதிரடியாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 158 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.நீண்ட காலமாக விசாரணை நடத்தப்பட்டு இந்த குற்றவாளி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த குற்றவாளி கும்பல் கனடிய தபால் திணைக்களத்தை பயன்படுத்தி போதைப் பொருட்களை ஏனைய மாகாணங்களுக்கு விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.இந்த குற்றவாளி கும்பல்கள் தொடர்பில் சுமார் 11 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ரொறன்ரோ பகுதி மட்டுமின்றி இந்த நபர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர்களை கைது செய்வதற்காக 35 பிடிவிராந்து உத்தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளன.சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 9 ஆயுதங்கள் மீட்கப் பட்டத்துடன், சுமார் ஐந்து கிலோகிராம் எடையினுடைய கொக்கெய்ன் போதை பொருளும் 6 கிலோகிராம் எடையுடைய மெத்தப்பட்டமைன் போதை பொருளும், மூன்று லட்சத்து 20 ஆயிரம் டொலர் பெறுமதியான பணமும் மீட்கப்பட்டுள்ளது
Discussion about this post