புளோரிடா கோல்ப் மைதானத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்த டிரம்பை கொலை செய்ய முயற்சித்த இளைஞனை உடனடியாக பொலிஸார் கைது செய்தனர்.சந்தேக நபரான இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபரான ரயானின் காரில் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த கையால் எழுதிட அட்டவணை கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் தனது தாக்குதல் குறித்த குறிப்பையும் சந்தேக நபர் ரயான் எழுதி வைத்துள்ளார். “Dear World” என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
குறித்த பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும், இருப்பு பைப் உள்ளிட்ட பிற பொருட்களும் இருந்துள்ளது.
மேலும் அதில் இருந்த குறிப்பில், டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி இது. ஆனால் நான் தோற்றுவிட்டேன். என்னால் முடித்தவரை எனது முழு சக்தியைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க நான் முயற்சி செய்தேன்.இப்போது இந்த வேலையே செய்து முடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. இந்த வேலையைச் செய்து முடிபவருக்கு நான் 150,000 டொலர்கள் [இலங்கை மதிப்பில் சுமார் 4.56 கோடி ரூபா] தருகிறேன் என்று ரயான் எழுதி வைத்துள்ளார்.இந்த பெட்டியிருந்த வீட்டில் வசித்து வந்தவரிடம் விசாரணையை பொலிஸார் நடந்து வருகின்றனர்.
Discussion about this post