திவுலப்பிட்டி நீர்கொழும்பு (Colombo) வீதியில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது திவுலப்பிட்டி நீர்கொழும்பு வீதியில் துனகஹா நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொதிகமுவ பகுதியில் இருந்து துனகஹா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திவுலப்பிட்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மூவர் உயிரிழப்புஇந்தநிலையில், விபத்திற்குள்ளானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மற்ற இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்திற்குள்ளானவர்கள் கொதிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post