Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

டிசம்பர் 21: இன்று உலக சேலை தினம்

December 21, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
டிசம்பர் 21: இன்று உலக சேலை தினம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சேலை என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவிழாக்கள், சுபகாரியங்கள், பாரம்பரிய நிகழ்வுகள்
போன்றவை தான் எனலாம்.

சங்க காலத்தில் பெண்கள் பல விதமான ஆடைகளை அணிந்திருந்தனர். அவ்வகையில் உயர்நிலையில் இருந்த அரசியர்களின் ஆடைகளாக பூந்துகில், கலிங்கம், கோடி நுண்துகில் போன்ற ஆடைகள் குறிப்பிடப்படுகின்றன.

ஆடைகளை நிலம் தோயும் அளவிற்கு உடுத்தியிருந்தனர். கச்சும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்பதை “கோடி நுண்டுகிலை கொய்மு கொண்டீஇயதாகப்” பெருங்கதை மூலம் அறியலாம்.

மேலும் பெண்கள் தைக்காத துணியினை உடலில் போர்த்தி வந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. சஙகத் தமிழ்ப்
பெண்கள் கீழாடையும், மேலாடையும் அணிந்திருந்தனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்கள் அணியும்
நீச்சல் உடுப்புக்கு ஈரணி என்ற பெயர் வைத்திருக்கின்றனர்.

ஈரணி என்பது இரண்டு அணி அதாவது இரண்டு உடுப்பு
என்ற பொருள் தரும். இளைஞர்களும், இளைஞிகளும் புனல் விளையாட்டில் ஈடுபடும் போது இந்த ஈரணி
நீச்சலாடையினை அணிந்து கொண்டே விளையாடுவர்.

சங்க காலத்தில் வைகை ஆற்றில் புனல் விளையாட்டு என்பது ஒரு பெரும் விழாவாகக் கொண்;டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

அது போல பண்டைக்காலத்தில் பூூவையும். தழையையும் கோர்த்து அணிவது வழக்கம். அவர்கள் கம்பலி
ஆடைகளையும் அணிவதுண்டு.

நகரமக்கள் பஞ்சாலும், பட்டாலும், ஒரு வகை மலை எலியின் முடியினாலும், வேறு சில விலங்களின் முடியினாலும் ஆடைகளை நெய்தார்கள். அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார உரையில் முப்பத்தாறு ஆடை வகைகளைக் குறிப்பிடுகின்றார்.

துணிகள் மிக,மிக நுண்ணிய நூல்களினால் நெய்யப்பட்டன. அவற்றுள் தனித்தனி இழைகள் கண்ணுக்குப் புலப்படா
புகையைப் போலவும், பாலாவியைப் போலவும், பாம்பின் தோலைப் போலவும், மூங்கிலின் உரியைப் போலவும்
துணிகள் நெய்யப்பட்டன. ஆடைகளுக்குப் பூவேலைகள் செய்வதுண்டு. பட்டுப் புடவைகளின் முந்தானைகளில் குஞ்சம் கட்டப்பட்டது.

பூந்துகில் வகைகள் மிகவும் வழுவழுப்பாக இருந்த காரணத்தால் வழுக்கி, வழுக்கி சரியுமாம்.
துணிகளுக்கு நறுமணம் ஊட்டுவதும் உண்டு. உலகின் மிகப் பழமையான ஆடை வடிவங்களில் ஒனறாகக்
கருதப்படுவது சேலை.

வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் முதன் முதலில் சேலை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மனிதர்கள் ஆடையை அணிந்து அவர்களது உடலின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்தனர் என்கிறது மாடஸ்டி கோட்பாடு, மாடஸ்டி கோட்பாடு ஒழுங்குணர்வு என்பது, தன்னடக்கத்தை சார்ந்திருக்கும் என்பதை உடல் உறுப்புகள் மறைத்து வெளிப் படுத்துகிறது என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இம்மாடஸ்டி கோட்பாடு அல்லது பாலின கவர்ச்சி ஒருவர் ஆடை அணிவது பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகவே அன்றி அவர்களது உடல் உறுப்புகளை மறைப்பதற்கு அல்ல என்று விளக்குகிறது.

அடார்ன்மென்ட் கோட்பாடு என்பது ஆடைகளின் அலங்கார அமைப்பு மற்றும் பிற தோற்றங்களையும், ஆடைகளில் ஒரு சில நோக்கங்களுக்கும், சில மாற்றங்களை செய்து எடுத்துக்காட்டவும், கவர்ச்சிக்காக அல்லது அழகுணர்வை வெளிப்படுத்துவதற்காகவும் செய்யப்படுவதை குறிக்கின்றன.

ஒவ்வொரு நாடுகளிலும் ஒரு விதமான ஆடைப்பழக்க வழக்கங்கள் இருக்கினறன. இப்படி எல்லா நாடுகளின்
கலாச்சாரத்திலும் ஆடை ஏதோ ஒரு இடம் பிடிக்கிறது.

அந்த வகையில் இந்தியா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஆண்களின் வேட்டியும், பெண்களின் சேலைகளும் தான். ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும். கலாசாரமும், ரசனை மற்றும் கலை நயத்தில் மாறுபட்டிருக்கிறது.

பார்போற்றும் பட்டு துணிகள் அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தரும் என்று புகழ்வார்கள.; பட்டுச் சேலைக்கு தோஷமில்லை என்பது ஐதீகம்.

தமிழகத்தில் காஞ்சீபுரம், ஆரணி, திருப்புவனம் மற்றும் ஆந்திர மாநிலம் தர்மாவரம் ஆகிய பட்டுகள் உலக பிரசித்திப் பெற்றவை. இதில் காஞ்சிபுரம் பட்டுதான் அதிகமாக பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது.

கேரளாவின் கசவு செட்டு என்றழைக்கப்படும் புடவையை வெறும் துண்டு, முண்டு மற்றும் கச்சையாகவே அப்பெண்கள் உடுத்தி வந்தனர்.

இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி, சோன்புரி சில்க், பொம்காய் என்றழைக்கப்படும் இப்புடவை எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப் பாட்டுடன் பொதுவாக
ஒன்பது கஜம் புடவையாக நெய்யப்படுகிறது.

மஹாராஷ்டிரா மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று நவாரி புடவையைக் கூறலாம்.

ஒவ்வொரு மராட்டிய பெண்களும், விழாக்காலங்களில் தவறாமல் அணிந்து கொள்கின்றனர். அதிலும் மராட்டிய புதுவருட பிறப்பு, விநாயகர் சதுர்த்தி திருவழா நாட்களில் நவாரியை அணிந்து கொண்டு தங்க நகைகளால் மேலும் அழகுப்படுத்தி நடனம் ஆடுவதை பல இடங்களிலும் பார்க்கலாம்.

அசாமில் நெய்யப்படும் முகா பட்டுப் புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டுநூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும் இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கும். இதுபோல உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட வகையான சேலையை உடுத்துகின்றனர்.

அண்மைக் காலங்களாக சேலைகளின் வரலாற்றை அறிந்து கொள்ளவும். அவற்றின் பெருமைகளை பேசவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21-ஆம் நாளான்று உலக சேலைகள் தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.

தொகுப்பு- பொ.ஜெயச்சந்திரன்
புதுக்கோட்டை.

Tags: #sareeDay#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

செயலிழந்த எக்ஸ் தளம்: அதிர்ச்சியில் பயனாளர்கள்

Next Post

அதிர்ச்சியளிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை

Next Post
அதிர்ச்சியளிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை

அதிர்ச்சியளிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.