இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (நவம்பர் 11) காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமையுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதாகப் புகார் கூறி, அவர் மீது குடியுரிமைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
Discussion about this post