சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷங்களை போல் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் சிவ பூஜை செய்வதும், சிவ பூஜையில் கலந்து கொள்வதும் புண்ணிய பலன்களை தரும்.
2024 ரவி பிரதோஷம்இந்த ஆண்டு ஆவணி மாத வளர்பிறையில் வரும் பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில் அமைந்துள்ளது. செப்டம்பர் 15ம் திகதியன்று பகல் 03.31 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 16ம் திகதி பகல் 01.30 மணி வரை திரியோதசி திதி உள்ளது. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் செப்டம்பர் 15ம் திகதி மாலை 06.26 மணி துவங்கி, இரவு 08.46 வரை விரதம் கடைபிடித்து, அதற்கு பிறகு சிவன் கோவில்களில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புகள்ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷம் என்பதால் இந்த நாளில் சிவன் மற்றும் சூரியனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு. ஒருவருடைய ஜாதகத்தில் உயர் பதவி, அரச பதவி, பதவி உயர்வு, அரசு தொடர்பான காரியங்கள், பதவி, பெயர், புகழ் ஆகியவற்றிற்கு காரணமானவர் சூரிய பகவான் தான். அதோ போல் முன்னோர்களுக்குரிய கிரகமும் சூரியன் தான் என்பதால் இவரை வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். தொழில் வளர்ச்சி, உறவுகளுக்குள் இருக்கும் சிக்கலை தீர்ப்பது, வாழ்வில் முன்னோற்றம் ஆகியவற்றை ரவி வார பிரதோஷம் தரும்.
ரவி பிரதோஷ பலன்கள்செப்டம்பர் 15ம் திகதி வரும் ரவி வார பிரதோஷத்திற்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், சூரிய பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் பிரவேசிக்க துவங்கும் புரட்டாசி மாதப் பிறப்பிற்கு முன்பு வரும் பிரதோஷம் என்பதால் இந்த நாளில் சிவ பெருமானை மனமுருக வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கைக்கு தேவையான செல்வம் ஆகியவை அனைத்தும் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.
Discussion about this post