பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கத்தோலிக்கப் பேராலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 42 பேர் காயமடைந்தனர்.
நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் நகரமான மராவியில் உள்ள மின்டானோ மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி
கூடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து அதிகாரிகள் கூறுகையில், நிலைமை “கட்டுப்பாட்டில் உள்ளது” என தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் தவுலா இஸ்லாமியா-மவுட் குழு எனப்படும் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று
பிராந்தியத்தின் காவல்துறை பொறுப்பதிகார் பிரிகேடியர் ஜெனரல் ஆலன் நோப்லேசா கூறினார்.
அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் குண்டுவெடிப்பை “அறிவற்ற மற்றும் மிகவும் கொடூரமான” செயல் என்று கண்டனம் செய்தார், இது “வெளிநாட்டு பயங்கரவாதிகளால் செய்யப்பட்டது”. என அவர் குறிப்பிட்ட போதிலும் அவர் விரிவாக எதனையும் கூறவில்லை.
பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “உறுதியாக இருங்கள், இந்த இரக்கமற்ற செயலை செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்,” என்று அவர் கூறினார்.
Discussion about this post