உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுதங்கள் வழங்கினாலும் வழங்கா விட்டாலும், ரஸ்யாவுக்கு எதிரான போரில் அந்நாடு வெல்லும் என்று போலந்து பிரதமர் மாடேயஸ் மோராவெய்க்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க பீரங்கிகளைத் தருமாறு ஜெர்மனியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு இன்னும் ஜெர்மனி தரப்பில் பதில்தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி உதவினாலும் உதவாவிட்டாலும் ஐரோப்பா நாடுகளின் துணையோடு போரை உக்ரைன் வெல்வது உறுதி என்று போலந்து பிரதமர் கூறியுள்ளார்
Discussion about this post